ஸ்ரீ உச்சிஷ்ட மஹா கணபதி

விநாயகரின் 8-வது வடிவம் - விரைவான சித்தியளிப்பவர்

ஸ்ரீ உச்சிஷ்ட மஹா கணபதி

விநாயகரின் 32 திருவுருவங்களில் 8-வது வடிவமான ஸ்ரீ உச்சிஷ்ட மஹா கணபதி - விரைவாக சித்தியளிக்கும் தாந்த்ரீக மூர்த்தி, நமது சன்னிதிக்காக உருவாகிறார்.

நமது சன்னிதிக்காக ஓர் அரிய தாந்த்ரீக மூர்த்தி

நமது தூத்துக்குடி மாவட்டம் வைப்பார் கிராமத்தில் அமையவிருக்கும் ஸ்ரீ வாராஹி பைரவர் சாம்ராஜ்யத்துக்காக ஸ்ரீ உச்சிஷ்ட மஹா கணபதி மூர்த்தி தயாராகிறார். விநாயகரின் 32 திருவுருவங்களில் 8-வது வடிவமான இவர், தாந்த்ரீக வழிபாட்டிற்குரியவர். இவருடைய வழிபாடு ஆன்மீகத்தில் மறைக்கப்பட்ட இரகசிய வழிபாடாகவே நெடுங்காலமாக உள்ளது. இந்த வழிபாட்டை எளிமையாக்கி பக்தர்களுக்குப் பயன்படும் வழியில் கொண்டு செல்வதே இந்த அரிய முயற்சி - இதில் நம் அன்பர்கள் அனைவரின் ஒத்துழைப்பும் பங்களிப்பும் இருக்க வேண்டும்.

திருவுருவம்

"உச்சிஷ்டம்" என்ற சொல்லுக்கு மேன்மையானது என்றும், தூய்மையான நிலை என்றும் பொருள் உண்டு. இவர் தனது இடது தொடையில் நீலவாணி (நீலசரஸ்வதி) தேவியை அமர்த்திய திவ்விய கோலத்தில் காட்சி தருகிறார் - ஞானமும் அருளும் இணைந்த வடிவம். சாஸ்திர சம்பிரதாய கட்டுப்பாடுகளைத் தாண்டி, பக்தியின் மிக நெருக்கமான நிலையில் வழிபடப்படும் மூர்த்தி.

வழிபாட்டு முறை

இவரின் உபாசனை தாந்த்ரீக மரபைச் சார்ந்தது; பக்தர்களுக்கு உடனடி பலன்களை அளிக்கும் 'க்ஷிப்ர சித்தி' - விரைவான வெற்றி - கொடுக்கக்கூடியது. சம்பிரதாய கட்டுப்பாடுகளைத் தாண்டி, பக்தர் இருக்கும் நிலையிலேயே அவர்களைச் சந்தித்து அருள் புரிபவர்.

காரிய சித்தி

சகல சௌபாக்கியங்கள், கல்வி, வீரம், தொழில், வியாபாரம், உத்தியோகம், திருமணத் தடை நீக்கம், புத்திர பாக்கியம், பெண் சாபம், பிதுர் தோஷம், கன்னி தோஷம், சர்ப்ப தோஷம், பிரம்மஹத்தி தோஷம், ஆவி, பேய், பிசாசு, மோகினியால் பாதிக்கப்பட்டவர்கள், மாந்திரிகம், பில்லி, சூனியம், ஏவல் - இவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை சரணடைய அனைத்தும் முற்றிலும் நீங்கும். ஆரோக்கியம், தனவசியம், பணவசியம், ஜன வசியம், தம்பதியர் ஒற்றுமை, தடைபட்ட காரியங்கள் நிறைவேற - பக்தர்கள் இவரை வழிபடுகின்றனர்.

இந்த உச்சிஷ்ட மஹா கணபதியை வழிபட்டாலே இவ்வளவு சிறப்பு என்றால், இவரின் திரு உருவச் சிலையை உருவாக்கும் திருப்பணியில் நமது பங்களிப்பு இருந்தால் எவ்வளவு பலன் கிடைக்கும்.

காணிக்கை செலுத்த